நடுவானில் விமானத்தில் பிரிந்த பச்சிளம் குழந்தையின் உயிர் - அதிர்ச்சி சம்பவம்

பச்சிளம் குழந்தைக்கு இருதய பிரச்சினை இருந்துள்ளது
நடுவானில் விமானத்தில் பிரிந்த பச்சிளம் குழந்தையின் உயிர் - அதிர்ச்சி சம்பவம்
Published on

மொரிஷியஸ் நாட்டை சேர்ந்தவர் மோனிஸ் குமார் (வயது 37) . இவரது மனைவி பூஜா (வயது 32). இந்த தம்பதிக்கு கடந்த 8 நாட்களுக்குமுன் மொரிஷியசில் ஆண் குழந்தை பிறந்தது.

பச்சிளம் குழந்தைக்கு இருதய பிரச்சினை இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் இருதய சிகிச்சையை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள தம்பதி திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், 8 நாட்களே ஆன தங்கள் குழந்தையை இன்று மொரிஷியசில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். நடுவானில் விமானத்தில் வந்தபோது திடீரென பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. விமானம் சென்னையில் தரையிறங்கிய நிலையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொரிஷியசில் இருந்து இருதய சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்ட பச்சிளம் குழந்தை நடுவானில் விமானத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com