தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனடைப்பு ரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது
Published on

தூத்துக்குடி மாவடடம், புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனடைப்பு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான மக்சன் சாமுவேல் (வயது 23) மற்றும் இசக்கிசெல்வம்(27) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக பைக்கில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மேற்சொன்ன போலீசார் அந்த வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com