ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பா? - தமிழக அரசு விளக்கம்

ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கிறதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பா? - தமிழக அரசு விளக்கம்
Published on

சென்னை,

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தமிழ்நாட்டில் வருடத்துக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன எனவும் அதில் 82 ஆயிரம் குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள் என்றும் ஒருவர் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் வருடத்துக்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல். தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருக்கிறது. பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 1,000 குழந்தை பிறப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டு 10.4 சதவீதம் ஆகவும், 2022-23-ம் ஆண்டு 10.2 சதவீதம் எனவும், 2023-24-ம் ஆண்டு 8.27 சதவீதம் என்றும் உள்ளது.

நடப்பாண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 89 ஆயிரத்து 838 ஆக உள்ளது. இதில் 3 ஆயிரத்து 838 குழந்தைகள் இறந்துள்ளது. இது இறப்பு விகிதத்தில் 7.8 சதவீதம் ஆக பதிவாகியிருக்கிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com