தமிழக மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர்...!

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 56 மீனவர்களில் 9 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர்...!
Published on

சென்னை,

ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 9 படகுகள் மற்றும் அதில் இருந்த 56 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

பின்னர் 56 மீனவர்களும் கடந்த மாதம் 25-ந் தேதி, சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்களுக்கு தொற்று உறுதியானதால் அவர்கள் தனிமையில் தங்க வைக்கப்பட்டனர். இந்திய துணை தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 56 மீனவர்களில் 9 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 6 பேரும், ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 3 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர். கொரோனா காரணமாக தாமதம் ஏற்பட்ட நிலையில் 9 மீனவர்களும் சொந்த ஊர் வந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com