நெல்லை மாவட்டத்தில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் தகவல்

டோக்கன் பெற்றவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் தகவல்
Published on

நெல்லை,

நெல்லை,தூத்துக்குடி, மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்தார். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதிகளுக்கு ரூ.1,000 நிவாரண தொகையாக அறிவித்தார்.

அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், டோக்கன் பெற்றவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com