ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம்

சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு மெட்ரோ ரெயில் முக்கிய பங்காற்றுகிறது.
ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம்
Published on

சென்னை,

சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு மெட்ரோ ரெயில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் சேவையை நடப்பாண்டு ஜனவரி மாதம் 86,99,344 பேர், பிப்ரவரி மாதம் 86,65,803 பேர், மார்ச் மாதம் 92,10,069 பேர், ஏப்ரல் மாதம் 87,89,587 பேர், மே மாதத்தில் 89,09,724 பேரும் பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 92,19,925 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

அதிகபட்சமாக ஜூன் 27-ந்தேதி 3,72,503 பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளனர். கடந்த மாதத்தில் பயண அட்டைகளை 6,09,226 பேரும், க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 42,07,124 பேரும், சிங்கார சென்னை அட்டையை 44,03,575 பேரும் பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com