அரியலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி
Published on

95.40 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை அரியலூர் மாவட்டத்தில் 172 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 79 மாணவர்களும், 4 ஆயிரத்து 781 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 860 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 748 மாணவர்களும், 4 ஆயிரத்து 658 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 406 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.48 சதவீதமும், மாணவிகள் 97.43 சதவீதமும் என மொத்தம் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

6-வது இடத்தை பிடித்தது

கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.70 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 13-வது இடத்தை பிடித்தது. நடப்பு ஆண்டில் 3.7 சதவீதம் தர்ச்சி அதிகரித்து, மாநில அளவில் 7 இடம் முன்னேறி, அரியலூர் மாவட்டம் 6-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com