60 ஆண்டுகால காங்கிரஸ் பயணம் முடிவு... தவெகவில் இணைந்த 96 வயது மூத்த உறுப்பினர்

96 வயதான மூத்த அரசியல்வாதி புதிய கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
60 ஆண்டுகால காங்கிரஸ் பயணம் முடிவு... தவெகவில் இணைந்த 96 வயது மூத்த உறுப்பினர்
Published on

சென்னை,

காங்கிரஸ் கட்சியில் சுமார் 60 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த மூத்த அரசியல்வாதி ஏ.பி. கமலம்மாள் (96), விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்துள்ளார்.

2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தனது 60 ஆண்டுகால காங்கிரஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் முன்னிலையில் கமலம்மாள் கட்சியில் இணைந்தார்.

Also Read
தவெக பெண் தொண்டர்கள் குறித்து அவதூறு பேச்சு - மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்
60 ஆண்டுகால காங்கிரஸ் பயணம் முடிவு... தவெகவில் இணைந்த 96 வயது மூத்த உறுப்பினர்

96 வயதான மூத்த அரசியல்வாதி புதிய கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com