தவெக பெண் தொண்டர்கள் குறித்து அவதூறு பேச்சு - மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்

தவெக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு பொன்ராஜ் மன்னிப்புக்கேட்டு பதிவிட்டுள்ளார்.
தவெக பெண் தொண்டர்கள் குறித்து அவதூறு பேச்சு - மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்
Published on

சென்னை,

அரசியல் விமர்சகர், அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் தமிழக பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அவர் தவெக பெண் தொண்டர்களை விமர்சித்து பேட்டி அளித்தார். அதற்கு தவெக தலைவர் விஜய் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தவெக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்புக்கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read
தமிழக பெண்களை மோசமாக பேசி வரும் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்
தவெக பெண் தொண்டர்கள் குறித்து அவதூறு பேச்சு - மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்

அதில், 'காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன். எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்." என்று தெரிவித்திருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com