9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; சப்-இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது

சென்னை ராயபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; சப்-இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது
Published on

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெபக்குமார் (வயது 55). இவர், போலீசில் உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி 2019-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றவர்.

இவர், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்தார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி ராயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஜெபக்குமார், மாணவிக்கு பாலியல் தொலை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபக்குமாரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com