கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது

மாணவிக்கு வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது.
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது
Published on

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்தபெண் சிறுமி போல இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் தேரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அவரும், அதே பகுதியைச் சேர்த்த கோபாலகிருஷ்ணன் (வயது 22) என்பவரும் காதலித்துள்ளனர்.

இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் மாணவியை திருமணம் செய்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் அங்குள்ள கோவிலில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். கோபாலகிருஷ்ணன் வீட்டில் மாணவி வசித்து வந்துள்ளார். அதன்பிறகும் அவர் பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மாணவி கர்ப்பம் ஆனதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவான அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com