15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது

புத்தன் அணை அருகே 15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
Published on

குலசேகரம், 

குமரி மாவட்டத்தில் புத்தன் அணை அருகே மக்கள் குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் பதுங்கி இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு நேற்று தகவல் கொடுத்தனர்.

உடனே வேளிமலை வனச்சரக அலுவலர் அதியமான் தலைமையில் வனக்காப்பாளர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அச்சுறுத்திய ராஜநாகத்தை பிடித்தனர். அந்த ராஜநாகம் 15 அடி நீளமுடையது.

பின்னர் ராஜநாகத்தை மக்கள் நடமாட்டமில்லாத வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com