

வந்தவாசி
வந்தவாசி தெற்கு பேலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பிற்பகல் ஆரணி சாலை வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட மற்றொரு நபரை பேலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர் 19 வயதே ஆனவர் என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பாக்கட்டிலிருந்த 10 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.