கோவையில் திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் ஆன 2.5 டன் எடை சிலை..!

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருவள்ளுவருக்கு 2.5 டன் எடையில் 1,330 தமிழ் எழுத்துகளால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

கோவை,

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே 25 அடி உயர தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 டன் எடையும் கொண்டது.

திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இந்த கம்பீரமான சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 247 எழுத்துக்களையும் மீண்டும் மீண்டும் உபயோகித்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 50 கோடி ரூபாய் செலவில் குறிச்சிகுளம் உட்பட கோவையின் ஏழு பழமையான ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏரி முகப்பு மேம்படுத்தப்பட்டு, தமிழர் கலாசாரம் மற்றும் பண்டிகைகளை பிரதிபலிக்கும் சிற்பங்கள் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலை விரைவில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com