மேடவாக்கத்தில் ரவுடிக்கு சரமாரி வெட்டு

மேடவாக்கத்தில் ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
மேடவாக்கத்தில் ரவுடிக்கு சரமாரி வெட்டு
Published on

சென்னையை அடுத்த பெரும்பக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிவா (வயது 35). ரவுடியான இவர் மீது பள்ளிக்கரணை போலீசில் 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு மேடவாக்கம் செம்மொழி சாலையில் உள்ள மதுபான கடை அருகில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிவாவை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் தலையில் பலத்த வெட்டு விழுந்ததால் சிவா மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பள்ளிக்கரணை போலீசார், சிவாவை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக சிவாவை வெட்டிக் கொலை செய்ய முயன்றனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com