தச்சம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

தச்சம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலியானான்.
தச்சம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
Published on

வாணாபுரம்

தச்சம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலியானான்.

தச்சம்பட்டு அருகே உள்ள அள்ளிக்கொண்டபட்டு பகுதியைச் சேர்ந்தவர அமல்ராஜ். இவரது மகன் சிபிதாமஸ் (வயது 8) அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது கால் தவறி ஏரியில் விழுந்த சிபிதாமஸ், நீரில் மூழ்கி இறந்து விட்டான்.

இது குறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com