தேசத்தை காக்க தன்னுயிர் தந்த காவல்துறை வீரர்களுக்கு வீரவணக்கம்- பிரேமலதா விஜயகாந்த்

வீரமரணமடைந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு என்றும் நாம் துணைநிற்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தேசத்தை காக்க தன்னுயிர் தந்த காவல்துறை வீரர்களுக்கு வீரவணக்கம்- பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
Published on: 

சென்னை,

காவலர் வீரவணக்க நாள் – அக்டோபர் 21 தேசத்தை காக்க தன்னுயிர் தந்த காவல்துறை வீரர்களுக்கு வீரவணக்கம் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவலர் வீரவணக்க நாள்

1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று, லடாக் எல்லை பகுதியில் தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 10 வீரர்களின் மகத்தான தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

சேவை அளப்பரியது

நாட்டின் எல்லை பாதுகாப்பு முதல் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது வரை, இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவல்துறையினரின் சேவை அளப்பரியது.

வீரவணக்கம்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் தங்களது இன்னுயிரை ஈந்த அனைத்து காவல்துறை வீரர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.

தலைவணங்குவோம்

வீரமரணமடைந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு என்றும் நாம் துணைநிற்க வேண்டும். நாட்டிற்காக அவர்கள் செய்த தியாகம் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது. காவலர்களின் தியாகத்தை போற்றுவோம்! அவர்களின் அர்ப்பணிப்புக்கு என்றும் தலைவணங்குவோம்!

வீரர்களின் தியாகம் என்றும் நிலைத்திருக்கும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com