சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த சரக்கு ஆட்டோ; 6 பேர் படுகாயம்

சாலை தடுப்புச்சுவரில் மோதி சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த சரக்கு ஆட்டோ; 6 பேர் படுகாயம்
Published on

சமயபுரம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மீனவர் தெருவை சேர்ந்த கலியனின் மகன் சிலம்பரசன்(வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்(47), விஜயா(48), பாண்டியன்(66), ராஜ்குமார்(43), தேவர்(39) ஆகியோரும் மீன் வாங்குவதற்காக நேற்று முன்தினம் அதிகாலை குன்னத்தில் இருந்து திருச்சி மார்க்கெட்டுக்கு ஒரு சரக்கு ஆட்டோவில் சென்றனர். சரக்கு ஆட்டோவை தேவர் ஓட்டினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரை அடுத்துள்ள சனமங்கலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ, சாலையின் மைய தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் டிரைவர் தேவர் உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com