குறுவட்ட அளவிலான கேரம் போட்டி

குறுவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது.
குறுவட்ட அளவிலான கேரம் போட்டி
Published on

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான கேரம் போட்டிகள் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளியில் நடைபெற்றது. போட்டியை த.கீழவெளி பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி மற்றும் பள்ளியின் தாளாளர் முத்துக்குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதேபோல் இறகுப்பந்து போட்டிகள் திருமுருகன் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. போட்டியினை ஆனந்தன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 260 பேர் கலந்து கொண்டு, திறமையை வெளிப்படுத்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை குறுவட்ட இணை செயலாளர் துரைராஜ் செய்திருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com