கிணற்றில் பிணமாக கிடந்த துப்புரவு பணியாளர்

கிணற்றில் துப்புரவு பணியாளா பிணமாக கிடந்தார்.
கிணற்றில் பிணமாக கிடந்த துப்புரவு பணியாளர்
Published on

திருவண்ணாமலை பல்லவநகரை சேர்ந்தவர் லூர்து ஜோசப்ராஜ் (வயது 50), துப்புரவு பணியாளர். இவரது மனைவி நவமணி (49). கடந்த 29-ந்தேதி லூர்துஜோசப்ராஜ் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நவமணி வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற போது லூர்துஜோசப்ராஜ் கிணற்றில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் கிடந்த லூர்துஜோசப்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com