சாவிலும் இணைபிரியாத தம்பதி; கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்தார்

காஞ்சீபுரத்தில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாவிலும் இணைபிரியாத தம்பதி; கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்தார்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பாவாப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 77). இவருடைய மனைவி மல்லிகா (68). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று அதிகாலை மல்லிகா தனது கணவர் துரைசாமியை எழுப்பியபோது அவர் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா கத்தி கூச்சலிட்டார்.

அவரது குடும்பத்தினர் உடனடியாக துரைசாமியை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், துரைசாமி மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மனைவியும் உயிரிழந்தார்

இது குறித்து வீட்டில் இருந்த அவருடைய மனைவி மல்லிகாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மல்லிகாவுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஒரே நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

சாவிலும் இணை பிரியாமல் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com