கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
Published on

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50), விவசாயி. இவர் நேற்று தனது பசுமாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதில் ஒரு மாடு மதியம் 2 மணியளவில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் மணிநேரம் போராடி கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com