சிறப்புக் குழந்தைகளுடன் ஒரு நாள்... ‘புன்னகை 2026’ நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பு!

கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் சிறப்புக் குழந்தைகளின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன.
அமைச்சர் ராஜ்மோகன்
Published on: 

சென்னை,

தமிழக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சென்னையில் உள்ள சிறப்புக் குழந்தைகள் தங்களுடைய திறமைகள், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட “புன்னகை 2026” – “விஐபி-களுடன் ஒரு நாள்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சிறப்புக் குழந்தைகள்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், ரோட்டராக்ட் கிளப் ஆப் ஆகாஷ் (Rotaract Club of Akash), ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் போர்ட் (Rotary Club of Madras Fort), ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233ன் சார்பில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகைக் கூட்டரங்கில் சென்னையில் உள்ள சிறப்புக் குழந்தைகள் தங்களுடைய திறமைகள், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட “புன்னகை 2026” – “விஐபி-களுடன் ஒரு நாள்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் சிறப்புக் குழந்தைகளின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. கடந்த 25 ஆண்டுகளாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான சிறப்புக் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி மூலம் மகிழ்ச்சி, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ உணர்வை வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரிடமும் தனித்துவமான திறமைகளும் ஆற்றல்களும் உள்ளன. அவை அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டியவை என்ற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. மேலும், சிறப்புக் குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இவ்வாறான நிகழ்வுகள் வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது.

இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் என். ஹரிகிருஷ்ணன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரியதர்ஷினி, உமா மகேஸ்வரி, ஜகதீஷ் கிருஷ்ணமூர்த்தி, சாய் கிருத்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X