வாய்க்காலில் பிணமாக மிதந்த ஆண்

வாய்க்காலில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
வாய்க்காலில் பிணமாக மிதந்த ஆண்
Published on

குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்தநிலையில் நேற்று முன்தினம் கிடந்துள்ளார். அவரது முகம் உள்ளிட்ட இடங்களை மீன்கள் கடித்ததற்கான அடையாளம் இருந்துள்ளது. இதுகுறித்து வைநல்லூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சதீஸ் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வாய்க்காலில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com