பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு

போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு உத்தரவிட்டுள்ளது.
பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் இன்று விசாரணைக்கு வந்தபோது, கட்டணம் நிர்ணயிக்க ஐகோர்ட் உத்தரவுப்படி போக்குவரத்து துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்மட்டக் குழுவை நியமித்து 2024 டிச.6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்தது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், மக்களுடன் ஆலோசித்து நான்கு மாதங்களுக்கு முடிவெடுக்க போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com