‘புதிய தலைமை செயலகத்திற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்

திரைப்படத்தில் மீனவர்களை காப்பாற்றுவது போல் ஒரு நடித்தார், ஆனால் இப்போது, மீனவர்களின் வீடுகளை இடிப்பது போல் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
‘புதிய தலைமை செயலகத்திற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தலைமை செயலகத்தை பட்டினப்பாக்கத்திற்கு மாற்றப்போவதாகவும், ரூ.1,200 கோடியில் திட்டம் போடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இன்னும் இடத்தை தேர்வு செய்யவில்லை, திட்ட அறிக்கை தயார் செய்யவில்லை, செலவு மதிப்பீடு செய்யவில்லை. இருப்பினும் ரூ.1,200 கோடியில் திட்டம் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை. இப்போது ரூ.2,000 கோடி என்று வேறு சொல்கிறார்கள்.

முதல்-அமைச்சர் விஜய் சினிமாவில் இருந்தபோது மீனவர்களை காப்பாற்றுவது போல் ஒரு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இப்போது, மீனவர்களின் வீடுகளை இடிப்பது போல் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இது முற்றிலும் கண்டனத்திற்குரியது. புதிய தலைமை செயலகத்திற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com