மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு

மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்கப்பட்டார்.
மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு
Published on

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் காட்டு கொட்டகை பகுதியை சோந்தவர் மாதேஸ்வரன் (வயது 39), விவசாயி. இவர் நேற்று இரவு மது போதையில் தனது குடும்பத்தினருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து மாதேஸ்வரனை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com