தமிழகத்தில் புதிதாக இன்று மேலும் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,13,584 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக இன்று மேலும் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,43,822 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,344 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 2,386 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,13,584 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18,894 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்ட்ங்களில் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com