சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வியாபாரி பலி

ஜோலார்பேட்டை அருகே சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வியாபாரி பலியானார்.
சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வியாபாரி பலி
Published on

திருப்பத்தூர் திம்மனமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 62), இவர் ஊர் ஊராக சைக்கிளில் சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துணி வியாபாரம் செய்துவிட்டு சைக்கிளில் பால்நாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து தர்மபுரி நோக்கி செல்லும் குளிர்சாதன அரசு பஸ் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சின்னராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com