ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலி

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலி
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலி
Published on

காரமடை

காரமடை அருகே வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சங்கரன்(வயது 60). இவர் காரமடை ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் சங்கரன் சம்பவத்தன்று வழக்கம் போல் பணி முடிந்து ஆசிரியர் காலனியில் இருந்து தனியார் பஸ்சில் தனது வீடு உள்ள வேளாங்கண்ணி பஸ் நிலைய பகுதிக்கு வந்துகொண்டு இருந்தார்.வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகே வளைவில் திரும்பியபோது, பஸ்சில் படிக்கட்டு பகுதியில் நின்றிருந்த சங்கரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com