பழனியில் தனியார் விடுதியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

பழனியில் தனியார் விடுதியில் கேரள தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
பழனியில் தனியார் விடுதியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

பழனி,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 66). மளிகை கடைக்காரர். இவரின் மனைவி சத்தியபாமா (62). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

சுகுமாறன் வங்கிகளில் கடன் வாங்கி இருப்பதாகவும், அதை திருப்பி செல்ல முடியாததால் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சுகுமாறன்-சத்தியபாமா தம்பதி தனது மகன் சதீஷிடம், கோத்தகிரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி ஆலத்தூரில் இருந்து கிளம்பினர். ஆனால் அவர்கள் பழனிக்கு வந்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் அவர்கள் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இரவில் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் விடுதி அறைக்கு திரும்பினர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் விடுதியின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த சுகுமாறன்-சத்தியபாமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விடுதி அறையில் போலீசார் சோதனை செய்த போது ஒரு கடிதம் இருந்தது. அதில், தங்களுக்கு வங்கி கடன் பிரச்சினை இருப்பதாகவும், அதை கட்ட முடியாததால் தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததாகவும், இதற்கு யாரும் காரணம் இல்லை என்று மலையாளத்தில் உருக்கமாக எழுதி வைத்திருந்தனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com