அன்புமணி ஆட்சி அமைவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது -ராமதாஸ் பேச்சு

அன்புமணியின் ஆட்சி அமைவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அன்புமணி ஆட்சி அமைவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது -ராமதாஸ் பேச்சு
Published on

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ஜ.க.வில் இருந்து விலகி பா.ம.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் ரவிராஜ் தனது ஆதரவாளர்களுடன் தன்னை பா.ம.க.வில் மீண்டும் இணைத்துக்கொண்டார்.

இதை தொடர்ந்து அவரை வரவேற்று, டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தாய் வீட்டுக்கு வந்துள்ள பா.ம.க. சொந்தங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தை பா.ம.க.வின் கோட்டையாக மாற்றி காட்டியவர், சில மாதங்களாக பா.ம.க.வில் இல்லை என்பது வருத்தம் தான். ஆனால் அவர் நெஞ்சத்தில் நானும், என்னுடைய நெஞ்சில் அவரும் உள்ளார்.

10 தொகுதிகளில் வெற்றி

டாக்டர் அன்புமணியின் ஆட்சி அமைய செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது. சரியான தருணத்தில் தான், ரவிராஜ் தாயைத் தேடி வந்து விட்டார். அவரது மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட வரவேற்கிறேன்.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ரவிராஜ் தலைமையில் இணைந்து பணி செய்து 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com