நாடு முழுவதும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி - கனிமொழி எம்.பி

இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தைக் கையில் எடுத்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என கனிழொமி எம்.பி. கூறினார்.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:-

நாடு முழுவதும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி, மத்திய அரசாங்கம் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுருந்தார்கள்.

எனினும் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்று பிம்பத்தை பரப்ப கூடிய சூழலில் ,

இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தைக் கையில் எடுத்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மத்திய அரசாங்கம் எந்தக் கேள்விக்குமே பதில் சொல்லாது என்ற சூழ்நிலையில் இருந்ததை, நாட்டு மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று பெற்றிருக்கக்கூடிய வெற்றி.

மேலும் அடுத்த கோரிக்கையாக, மாநிலப் பட்டியலுக்கு கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கை அதுவே. இதில் வெற்றி பெற்றால் நிச்சயமாக நாங்களும் வெற்றி அடைவோம்.

மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் நிச்சயமாக நீட் ரத்து செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.

அருணாச்சலத்தின் குடும்பத்தைதான் சந்திப்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் காவல் மரணம் குறித்து பலமுறை பேசியிருக்கிறார்கள். முதல்-அமைச்சர் காவல் நிலைய கொலைகளைப் பற்றி வாய் திறப்பதே கிடையாது என்ற குற்றச்சாட்டை எங்களுடைய தலைவர் நேற்று முன்வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தாமல், தங்களுக்கு யாரெல்லாம் எதிரியாக நினைக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது, தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினுடைய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com