நடந்து சென்றவர் வாகனம் மோதி சாவு

நடந்து சென்றவர் வாகனம் மோதி உயிரிழந்தார்.
நடந்து சென்றவர் வாகனம் மோதி சாவு
Published on

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் வசித்து வந்தவர் முகமது சேட்(வயது 42). இவர், கடந்த 23-ந்தேதி இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாலிகண்டபுரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com