ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,659-க்கு ஏலம்

பாபநாசத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,659-க்கு ஏலம் போனது.
ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,659-க்கு ஏலம்
Published on

பாபநாசம்;

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர். ரா.தாட்சாயினி தலைமையில் நடந்தது. வேளாண் உதவி அலுவலர் சப்தகிரி நாதன் முன்னிலை வகித்தார். பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பருத்தி ஏலத்துக்க கொண்டுவரப்பட்டது. சராசரியாக 120 குவிண்டால் பருத்தி ஏலத்துக்கு கொண்டு வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,659-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5,289-க்கும் விலை போனது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com