திருவள்ளுவரையே இருளில் ஆழ்த்திய ஆட்சி! - நயினார் நாகேந்திரன்

திருவள்ளுவர் சிலையே மூன்று நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழகத்தின் தலைநகரில் தொடங்கி கிராமங்கள் வரை தினந்தோறும் அடிக்கடி மின்வெட்டு நிகழ்வது தவெக ஆட்சியில் அன்றாட நிகழ்வாகிவிட்ட வேளையில், கொடூரத்தின் உச்சமாக உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையே மூன்று நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கியதாக வெளிவந்துள்ள அவலச் செய்தி தவெக அரசின் திறனற்ற ஆட்சிக்கான சாட்சி!

தொடர் மின்வெட்டு

"தவெக ஆட்சியில் 24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும்" என்று அன்று தேர்தல் வாக்குறுதியில் முழங்கிய முதல்-அமைச்சர் விஜய், தற்போது வள்ளுவர் சிலையே இருளில் மூழ்கியதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? மின்வெட்டால் மக்கள் தூக்கமின்றித் தவிப்பதை வேடிக்கை பார்த்தது போல, இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறாரா? திருவள்ளுவரின் ஆடையின் நிறத்திற்கு வரிவரியாய் எழுதி வரிந்து கட்டிய தவெக அமைச்சர் அருண்ராஜ், தற்போது திருவள்ளுவர் சிலையை இருளில் ஆழ்த்திய தவெக அரசை கண்டிப்பாரா அல்லது வக்காலத்து வாங்குவாரா?

மொத்தத்தில், போலி விடியல் ஆட்சியில் இருந்து தப்பிக்க நினைத்த தமிழக மக்களை இருளில் தத்தளிக்க விட்டதோடு, தனது திறனற்ற நிர்வாகத்தால் ஐயன் வள்ளுவர் சிலையையும் இருளில் ஆழ்த்திய இந்த தவெக அரசு "மாற்றுச் சக்தி" என்ற வார்த்தையைக் கூட இனி என்றும் உச்சரிக்கக் கூடாது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com