வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Published on

பட்டுக்கோட்டையில் முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதம்

பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஏ.வி.குளம் தெரு பகுதியைச்சேர்ந்தவர் நாடிமுத்து. இவருடைய மகன் சபரி என்கிற சபரிநாதன் (வயது28). இவருக்கும், பூக்கொல்லை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் உள்ளிட்ட சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோவில் அருகில் மோட்டார்சைக்கிளில் சபரிநாதன் வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்த பட்டுக்கோட்டை பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பஞ்சநாதன் மகன் தினேஷ்குமார் (27), பாளையம் சின்னசாமி மகன் உதயகுமார் (25), ஏ.வி.குளம் கணேசமூர்த்தி மகன் வீரகணேஷ் (19), ராஜா மகன் கோகுலகிருஷ்ணன் ( 19), கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த மணிமுத்து மகன் மணிகண்டன் (23) ஆகியோர் சேர்ந்து சபரிநாதன் மீது மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டினர்.

5 பேர் கைது

இதுகுறித்து சபரிநாதன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமார், உதயகுமார், வீரகணேஷ், கோகுலகிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com