வாலிபருக்கு அரிவாள் வெட்டு

பெரியகுளத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Published on

பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் காமாட்சி (வயது 30). கூலித்தொழிலாளி. பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் வீட்டின் அருகே காமாட்சி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சக்திவேல், காமாட்சியை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதுடன், அரிவாளால் அவரது கையில் வெட்டினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காமாட்சி தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com