வேடசந்தூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வேடசந்தூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
வேடசந்தூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Published on

வேடசந்தூர் ஆத்துமேடு காசாநகரை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு விஜயன் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அரை மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு குளியல் அறையில் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு படைவீரர்கள் லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை, தீயணைப்பு படையினர் வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com