

சென்னை,
வாகனப் போக்குவரத்தின் போது திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் அருகில் உள்ள சாலையில் இன்று திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து மெட்ரோ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பள்ளத்தால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஏற்கனவே ஒரு முறை பள்ளம் விழுந்த நிலையில், இன்று மீண்டும் பள்ளம் விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற பள்ளம் மீண்டும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.