

திருவள்ளூர்,
நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய போது அங்கு சிரித்துக்கொண்டிருந்த ஒப்பந்ததாரரை அதிகாரி ஒருவர் கடுமையான சொற்களால் எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தில் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வின்போது அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் சிரித்துக்கொண்டும், மற்றவர்களிடம் பேசிக்கொண்டும் இருந்ததாக தெரிகிறது. இதனை கவனித்த அதிகாரி, அந்த ஒப்பந்ததாரரை கடுமையாக எச்சரித்தார்.
அப்போது, “நீ என்ன ரொம்ப சிரிச்சிட்டு இருக்க? இங்க என்ன நடந்துட்டு இருக்குனு உனக்குத் தெரியுமா?” என அதிகாரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.