தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

தூசி

தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

வெம்பாக்கம் தாலுகா அரசாணிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 27). விவசாயி. இவர் தனது நிலத்தில் உள்ள மரத்தை வெட்டியுள்ளார். அப்போது மரக்கிளையில் மின் ஒயர் பட்டு கோபாலகிருஷ்ணனை மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது தம்பி முனுசாமி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com