ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
Published on

கும்பகோணம் அருகே சாக்கோட்டை நீடாமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரகு(வயது29). நேற்று மதியம் இவர் சாக்கோட்டை நாட்டாற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரகு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com