லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலியானார்.
லாரி மோதி வாலிபர் பலி
Published on

விராலிமலை மணமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கராஜ் மகன் நாராயணன் என்கிற ராஜேஸ் (வயது 27). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இலுப்பூர்- விராலிமலை சாலை சோதனைச்சாவடி அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக ராஜேஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com