உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம்
Published on

உளுந்தூர்பேட்டை, 

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநரங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ஏழுமலை (வயது 35). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா (30), பழனிவேல் (31) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கூந்தலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பழனிவேல் ஓட்டினார். உளுந்தூர்பேட்டை அடுத்த புள்ளூர் குறுக்கு சாலையில் வந்தபோது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேருக்கு தீவிர சிகிச்சை

இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபாமக உயிரிழந்தார். படுகாயங்களுடன் கிடந்த ராஜா, பழனிவேல் ஆகியோரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான ஏழுமலையின் உடலை கைப்பற்றியதோடு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com