லாரி மோதி வாலிபர் பலி

வாலாஜா அருகே லாரி மோதி வாலிபர் பலியானார்.
லாரி மோதி வாலிபர் பலி
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஏஜர் (வயது 21). இவர், வாலாஜாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வாலாஜா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஏஜர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com