தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

தூத்துக்குடி திரவியபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 20). இவர் தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் சவுந்தரபாண்டியன் (20), தூத்துக்குடி தாளமுத்துநகர் பவிஸ்ரீ நகரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் செல்வபெருமாள் என்ற கட்டப்பெருமாள் (22) ஆகிய 2 பேரும் மாரிசெல்வத்தை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து உள்ளனர். பின்னர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து மாரிசெல்வம் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்னவேல் பாண்டியன் வழக்கு பதிவு செய்து சவுந்தரபாண்டியன், செல்வபெருமாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட சவுந்தரபாண்டியன் மீது ஏற்கனவே 2 வழக்குகளும், செல்வபெருமாள் மீது 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com