காதலிக்குமாறு கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது

வாலிபரின் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் செய்தார்.
காதலிக்குமாறு கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 24). இவர் 16 வயதுடைய நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவியை கல்லூரிக்கு சென்று வரும்போது பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை மேற்கொண்டு போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com