குடிபோதையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட வாலிபர் பலி

விழுப்புரம் அருகே குடிபோதையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குடிபோதையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட வாலிபர் பலி
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள ஏழு செம்பொன் என்ற ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன் (வயது 34). இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு குடிபோதையில் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.

இதனால் உடல் வெந்த நிலையில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் பின் மேல் சிகிச்சைக்காக சென்னைகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்று நேற்று மணிகண்டன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com