திருவொற்றியூரில் உடலில் காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்பு அடித்துக்கொலையா?

திருவொற்றியூரில் உடலில் காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்பு அடித்துக்கொலையா?.
திருவொற்றியூரில் உடலில் காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்பு அடித்துக்கொலையா?
Published on

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் குப்பம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 22). இவர் நேற்று அதிகாலையில் திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் செல்லும் கடற்கரை சாலையோர சர்வீஸ் சாலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரித்தபோது நேற்று முன்தினம் இரவு உதயகுமார், ஊர் திருவிழா என்பதால் தனது நண்பர் காமேஷ் என்பவரது மோட்டார் சைக்கிளை வாங்கி ஓட்டி சென்றுள்ளார். அந்த மோட்டார் சைக்கிள் உதயகுமார் பிணமாக கிடந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் கிடந்தது.

பிணமாக கிடந்த உதயகுமாரின் தலை மற்றும் கைகளில் ரத்த காயங்களும் காணப்பட்டது. எனவே மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாலை விபத்தில் சிக்கி அவர் மரணம் அடைந்தாரா? என்ற கோணத்தில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com